×

அகில இந்திய காங். தலைவர் மீது பாலியல் புகார்; ஹே கேர்ள்… ‘ஓட்கா’ குடிக்கிறீர்களா?.. அசாம் பிரிவு பெண் நிர்வாகி காட்டம்

கவுகாத்தி: அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவரான ஸ்ரீனிவாஸ் மீது அசாம் பிரிவு தலைவர் அங்கீதா தத்தா பரபரப்பு பாலியல் புகாரை தெரிவித்துள்ளார். இவ்விவகாரம் குறித்து காங்கிரஸ் தலைமை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறியுள்ளார். அகில இந்திய இளைஞர் காங்கிரஸின் அசாம் பிரிவின் தலைவரான அங்கீதா தத்தா, அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவரான ஸ்ரீனிவாஸ் மீது பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில்:
அகில இந்திய இளைஞர் காங்கிரசின் தலைவருமான ஸ்ரீனிவாஸ், என்னை பாலியல் ரீதியாகவும், மனரீதியாக துன்புறுத்தினார். பாலின அடிப்படையில் பாகுபாடு காட்டினார். இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரிடம் புகார் அளித்தும் ஸ்ரீனிவாஸ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எந்தவொரு விசாரணைக் குழுவையும் அமைக்கவில்லை. அவர் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என்று பல மாதங்களாக எதிர்பார்த்து அமைதியாக இருந்தேன்.

ஆனால் யாரும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தனக்கு தலைமையிடம் செல்வாக்கு இருப்பதாக கூறிக் கொண்டு, ஸ்ரீனிவாஸ் நிறைய தவறுகளை செய்கிறார். எல்லா வகையான தவறான செயல்களிலிருந்தும் தப்பித்து வருகிறார். காங்கிரசில் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளதா? ஆனால் ராகுல் காந்தி பெண்களைப் பற்றி பெருமையாக பேசுகிறார். ஸ்ரீனிவாஸ் மட்டுமின்றி, இளைஞர் காங்கிரசின் பொதுச் செயலாளர் வர்தன் யாதவும் என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். அவர் மீதும் கட்சி தலைமையிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்னை ‘ஹே கேர்ள்’ என்று வர்தன் யாதவ் அழைத்தார்.

ராய்ப்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தின்போது, ஸ்ரீனிவாஸ் என்னிடம் வந்து என்ன குடிக்கிறீர்கள்?, ஓட்கா (போதை பொருள்) குடிக்கிறீர்களா? என்று கேட்டார். தேசிய தலைவர் ஒருவர், மாநில பெண் தலைவரிடமும் இப்படிப் பேசுவதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். இதுகுறித்தும் கட்சித் தலைமையிடமும், காங்கிரஸ் பொதுச் செயலாளரிடமும் முறையிட்டேன். ஆனால் எவ்வித நடவடிக்கையும் இல்லை’ என்று தெரிவித்துள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக ஸ்ரீனிவாஸ் தரப்பிலோ அல்லது காங்கிரஸ் தரப்பிலோ எவ்வித பதிலும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

The post அகில இந்திய காங். தலைவர் மீது பாலியல் புகார்; ஹே கேர்ள்… ‘ஓட்கா’ குடிக்கிறீர்களா?.. அசாம் பிரிவு பெண் நிர்வாகி காட்டம் appeared first on Dinakaran.

Tags : All India Kong ,Assam Division ,Gauvathi ,Angitha Datta ,All India Youth Congress ,Srinivas ,Gatam ,
× RELATED அசாமில் நடந்த கொடூரம்; 4 பேரால்...